நெகட்டிவ் கேரக்டரில் விஜய்.

ஜில்லா படம் முடிவடைந்த பின் எவ்வித டென்ஷனும் இல்லாமல் விஜய் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் கதைக்களம் கொல்கத்தா என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யுடன் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ், மும்பையை மையமாக வைத்து துப்பாக்கி படத்தை எடுத்தவர், தற்போது கொல்கத்தாவை தேர்வு செய்திருக்கிறார். இம்முறை விஜய் ஏற்க இருப்பது நெகட்டிவ் வேடம். கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. நெகட்டிவ் வேடமாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாம். உண்மைக்கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என தெரிகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் மதன்கார்க்கி எழுதுகிறார். வரும் பிப்ரவரி முதல் படப்பிடிப்பு தொடங்கி வரும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.

சென்ற வாரம் படத்தின் கேமராமேன் ஜார்ஜ் வில்லியம்ஸும், ஏ.ஆர்.முருகதாசும் கொல்கத்தா சென்று படப்பிடிப்புக்கான லொகேஷன் எல்லாம் பார்த்து முடிவு செய்திருக்கின்றனர். படப்பிடிப்புக்கு மேற்குவங்க அரசின் அனுமதியும் பெற்றுவிட்டாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

Share |
Previous Page Next Page HOME