கடந்த 2005ஆம் ஆண்டு சின்பு, கோபிகா நடித்த தொட்டி ஜெயா என்ற ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படத்தை இயக்கியவர்தான் துரை. ஒன்பது வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த இவர், தற்போது தன் பழைய நண்பரான சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அதற்காக திரைக்கதையையும் ரெடி செய்துவிட்டார்.
2014ஆம் ஆண்டில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கும் சிம்பு, பழைய நண்பருடன் இணைவதில் மிகவும் ஆர்வமாக உள்ளாராம். ஏற்கனவே கவுதம் மேனன் படத்திலும், பாண்டியராஜ் படத்தில் நயன் தாராவுடனும் நடித்துக்கொண்டிருக்கும் அவர், இடையிடையே வேட்டை மன்னன், வாலு படங்களிலும், நடித்துக்கொண்டே வருகிறார். மேலும் செல்வராகவனும் சிம்புவிடம் ஒரு கதை சொல்லி நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில் துரையின் படத்தில் நடிக்கவே, 2014ஆம் வருடம் மட்டும் சுமார் ஆறு படங்கள் சிம்புவுக்கு வெளிவர காத்திருக்கின்றது.
துரை இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் ஹீரோயினிக்கு மிக முக்கிய வேடமாம். கிட்டத்தட்ட பில்லாவில் நயன்தாரா நடித்த அதே போன்று கேரக்டர். அதனால் இந்த கேரக்டரில் நயன் தாரா நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என துரை முடிவு செய்திருக்கிறார். ஆனால் சிம்புவுக்கு தயக்கம். மீண்டும் நயன்தாராவுடன் இணைந்தால், அவர்தான் நயன் தாராவை பரிந்துரை செய்ததாக மீடியாவில் தேவையில்லாத கிசுகிசு கிளம்பும் என அலறுகிறார் சிம்பு. ஆனாலும் துரை இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறாராம். நயன்தாரா இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

![]()