ஆவின் பாக்கெட்டை கொடுத்துட்டு பசுமாட்டை ஓட்டிட்டு போற திட்டமா இருக்கே – ரஜினி

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று தனது டிஆர்பி லெவலை ஏற்றிக் கொள்வதற்காக சினிமா சம்பந்தப்பட்ட எத்தனையோ விஷயங்களை செய்து பார்த்தது. எதுவும் வொர்க்கவுட் நஹி. சிண்டை பிய்த்துக் கொண்டவர்களுக்கு திடீரென கண்ணில் பட்டவர் கே.எஸ்.ரவிகுமார். அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தினாலென்ன என்று நினைத்தார்கள்.

அவர் சினிமாவுக்கு வந்து இருபத்தைந்து வருடம் ஆகிவிட்டது. அதற்கான வெள்ளி விழாதான் இது என்று கூறிவிட்டார்கள். கணக்குப்படி பார்த்தால் அதற்கு இன்னும் இரண்டு வருஷம் இருப்பதாக கூறுகிறார்கள் புள்ளி விபர புலிகள். இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனை அழைத்தவர்கள் அப்படியே ரஜினியையும் அழைத்தார்களாம்.

ஆவின் பாக்கெட்டை கொடுத்துட்டு பசுமாட்டை ஓட்டிட்டு போற திட்டமா இருக்கே என்று முதலில் அதிர்ந்தவர், என் பெயரை எங்கும் போடக் கூடாது. கே.எஸ்.ரவிகுமாருக்காக விழா தினத்தன்று மேடைக்கு வருவேன் என்று கூறியிருக்கிறாராம்.

Share |
Previous Page Next Page HOME