தனுஷ் படத்தில் ஆட மறுப்பு: நன்றி மறந்த சிவகார்த்திகேயன்

தனுஷும் சிவகார்த்திகேயனும் ஒருவரை ஒருவர் அண்ணன் தம்பி போல பழகிவந்தனர். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உள்ளதாக கோலிவுட்டில் அதிர்ச்சியுடன் கூறப்படுகிறது.

3, மெரினா, மனம் கொத்தி பறவை, ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு கோலிவுட்டில் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை. இந்த நேரத்தில்தான் தனுஷ் தயாரிப்பில் 'எதிர்நீச்சல்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். எதிர்நீச்சல் படத்திற்காக தனுஷும், நயன்தாராவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக்கொடுத்து படத்தை மேலும் புரமோட் செய்ததால் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது.அதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உயர்ந்தது. அதையடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற ஹாட்ரிக் வெற்றிகளை தொடர்ந்து தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒருவராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன்.

ஆனால் தனுஷின் நிலையோ தலைகீழாக உள்ளது. இந்த வருடன் வெளியான தனுஷின் படங்களான மரியான், நய்யாண்டி ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக தோல்வி அடைந்து தயாரிப்பாளர் கையை கடித்தது. இதனால் தனுஷ் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வேலையில்லாத பட்டதாரி படத்தை வியாபாரம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் விநியோகிஸ்தர் ஒருவர் வேலையில்லாத பட்டதாரி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பாடல் வாய்ப்பு கொடுத்தால் படத்தை புரமோட் செய்ய நன்றாக இருக்கும் என ஐடியா கூற தனுஷ் டென்ஷனாகிவிட்டாராம். என் படத்தை புரமொட் செய்ய அவனா? என கோபமாக கத்தி அந்த விநியோகிஸ்தரை வெளியே அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த சிவகார்த்திகேயன், தான் எந்த படத்திற்கு ஒரு பாடலுக்கு நடனம் ஆடமாட்டேன் என்று கூறினாராம். இது தனுஷை எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியதுபோல ஆகிவிட்டதாம். இருவருக்கும் இடையே தற்போது எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என கூறப்படுகிறது.

Share |
Previous Page Next Page HOME