டாப்சிதான் வேண்டும். அடம்பிடிக்கும் ஆர்யா.

தடையற தாக்க என்ற படத்தினை இயக்கிய மகிழ் திருமேனி தற்போது 'மேகமான்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக நடிக்க இயக்குனர் முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேசினார். ஆனால் ஸ்ருதிஹாசன் ஆர்யாவுடன் நடிக்க முடியாது என மறுத்துவிட்டாராம்.

ஆர்யா, தனக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க வைக்க இயக்குனரிடம் பரிந்துரை செய்தாராம். ஆனால் இயக்குனர் 'ஏற்கனவே ஆரம்பம் படத்தில் டாப்சியுடன் ஜோடி சேர்ந்துள்ளதால் மீண்டும் இருவரையும் ஜோடி சேர்த்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்றும் அதனால் வேறு ஹீரோயினியை ஒப்பந்தம் செய்யலாம் என்று மறுத்துவிட்டார். இதனால் வெறுத்துப்போன ஆர்யா, மகிழ்திருமேனி யாரை ஹீரோயினியாக ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தாலும் அவரைப் பற்றிய ஏதாவது மைனஸ் குறிப்புகளை கூறி அந்த நடிகை வேண்டாம் என்று கூறிவருகிறாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் மகிழ்திருமேனி, வேறு வழியின்றி டாப்சியையே ஹீரோயினியாக ஒப்பந்தம் செய்ய இயக்குனர் முடிவு செய்துவிட்டாராம்.ஆரம்பம் படத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேரும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி நிஜ வாழ்விலும் ஒர்க் அவுட் ஆகிக்கொண்டிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share |
Previous Page Next Page HOME