கோச்சடையான் வருமா? இல்லை வராதா? சௌந்தர்யா பரபரப்பு பதில்

சாதாரணமாகவே நம்ம ஊர் ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் ஒரு வருடத்திலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வருடத்திலோ வெளியாகி விடும். ஆனால், ரஜினி நடிக்கிற கோச்சடையான் படம் இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே செல்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் படம் வருமா? இல்லை வராதா? என்கிற சந்தேகக் கேள்விகள் தினம் தினம் எழுந்து கொண்டிருக்கின்றன. படம் தாமதமாவதற்கான காரணம், அனிமேஷன் வேலைகள் நடப்பதுதான். அதுவும் அவதார் போன்ற படங்கள் வரிசையில் இப்படமும் உருவாகி வருவதால்தான் இத்தனை காலதாமதம் என்று சொன்ன பிறகும் ரசிக கோடிகள் நம்புவதாக இல்லை. இதனால்தான் சமீபத்தில் கோச்சடையான் ட்ராப் அகி விட்டதாககூட வதந்தி பரவியது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழில் டப்பிங் வேலைகள் நடப்பது போன்று செய்தி வெளியிட்டார்கள். அதையடுத்து இப்போது தெலுங்கு டப்பிங் நடப்பதாகவும், தெலுங்கிற்கு விக்ரம் சிம்ஹா என்று பெயர் வைத்திருப்பதாகவும் புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் பட இயக்குனரான செளந்தர்யா. மேலும், இதற்கடுத்து இந்தி டப்பிங் நடக்கிறது என்று தெரிவித்துள்ள செளந்தர்யா. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் விரைவில் வெளியாகிறது என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பவர், அது இந்த ஆண்டா? அல்லது அடுத்த ஆண்டா? என்று உறுதிப்படுத்தவில்லை.

அதசேமயம் இந்தாண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் கோச்சடையான் படத்தை வெளியிடப்போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Share |
Previous Page Next Page HOME