ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'கத்தி' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதே தினத்தில் ஷாருக்கானின் 'ஹேப்பி நியூ இயர்' திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.
இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்து கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. சிம்புதேவன் இயக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'ஹேப்பி நியூ இயர்' படத்தை அடுத்து ஷாருக்கான் தயாரித்து நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், இதனால் ஸ்ருதிஹாசன் விஜய் படத்தில் இருந்து விலக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஜய் படத்திற்கு கொடுத்த அதே தேதிகளை ஷாருக்கானும் கேட்பதால், வேறு வழியின்றி விஜய் படத்தில் இருந்து விலகிக்கொள்ள ஸ்ருதிஹாசன் முடிவெடுத்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஷாருக்கான் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு இதுவரை அவர் வாங்கியிராத மிகப்பெரிய தொகை சம்பளம் கிடைத்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி ஷாருக்கானுடன் நடித்தால் உலக அளவில் பிரபலமாகக்கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் பாலிவுட்டிலும் வலுவாக காலூன்றலாம் என்பதாலும் ஸ்ருதிஹாசன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த செய்தி தவறானது என்றும் ஸ்ருதிஹாசனுக்கு ஷாருக்கான் பட அழைப்பு எதுவும் வரவில்லை என்றும் அவரது தரப்பில் இருந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எது உண்மை என்று சில நாட்களில் தெரியவரத்தான் போகிறது.
Tag: vijay next movie, vijay simbu devan movie news, sruthihasan news,

![]()