செக்ஸ் என்பது ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது : இலியானா பதிலால் ஆடிப்போன திரையுலகம்

கேடி படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து பெயர் வாங்கிய இலியானா, அதன்பின் தெலுங்கில் டாப் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக மாறி பின்பு ஹிந்தி திரையுலகிற்கு சென்றார். அங்கும் நல்ல பெயர் எடுத்தார். அதன்பின் நண்பன் படத்திற்காக மீண்டும் தமிழுக்கு வந்தார். ஆனால் அதன்பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இதுகுறித்து பின் ஒரு பிரபல பத்திரிகையில் எனக்கு தமிழில் நடிக்க அவ்வளோ விருப்பம் இல்லை என்று சொல்லி கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். இதன்பின்னர் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை.

தற்போது  'ஹேப்பி என்டிங்' படத்தில் நடித்து வரும் இலியானா சமீபத்தில் செக்ஸ் பற்றிய கூறிய கருத்தை கேட்டு திரையுலகமே ஆடிப்போனது.  “செக்ஸ் என்பது ஒருவேளை நம் உடம்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அது ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது, அது அவசியமான ஒன்றுதான்,” என்று கூறியிருக்கிறார். மேலும் என்னுடைய 11வது வயதில் செக்ஸ் பற்றி அப்பாவிடம் விவாதித்திருக்கிறேன் என்றும் சொல்லி  பரபரப்பை ஏற்படுத்தினார் இவரது கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share |
Previous Page Next Page HOME