வீரம் படத்துக்கு பின் அஜித் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துவருகிறார் என்பது நமக்கு தெரிந்ததே. பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் 56வது படத்தை வீரம் சிவ இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலும் ரெடியாகிவிட்டதாம். ஆனால் இப்படத்துக்கு இப்போது புதிய சிக்கல் சரியான தயாரிப்பாளர் அமையவில்லையாம். அஜீத் படத்தைத் தயாரிக்க வேண்டுமென்றால் குறைந்தது 70 கோடியாவது வேண்டும் என்ற நிலை. காரணம் அவர் சம்பளம் மட்டுமே 50 கோடியைத் தொடுகிறது. வரி செலுத்தியது போக, முழுவதும் வெள்ளையாகத்தான் வேண்டும் என்பது அவர் போடும் முதல் நிபந்தனை. தயாரிக்க முன் வந்த பிவிபி சினிமாஸ் ஏற்கெனவே சில சிக்கல்களில் இருப்பதால், வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத். நல்ல தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா.