மற்ற நடிகர்களுக்கு விஜய் பாடலாமே: மதன் கார்க்கி



கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பல பிரச்சனைகளை கடந்து 18ம் தேதி  நல்லபடியாக நடந்தேறியது. துப்பாக்கி வெற்றி படத்தை கொடுத்த இயக்குநா் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியின் அடுத்த படைப்பான இந்த படத்தில் முதன் முறையாக சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அனிருத் கைவண்ணத்தில் பாடல்கள் அருமையாக உள்ளது.

மதன் கார்க்கி பேசும்போது,

“விஜய், அவர் நடிக்கும் படத்தில் மட்டும்தான் பாட்டு பாடி வருகிறார். மற்ற நடிகர்கள் நடிக்கும் படத்திற்கும் பாடல் பாட வேண்டும். பழைய ஆன்ட்ராய்டு மொபைல்கள் செல்பி எடுக்கும். ஆனால், தற்போது இருக்கும் ஆன்ட்ராய்டு மொபைல்கள் செல்பிபுள்ள எடுக்கும்” என்றார்.

இவ்விழாவில் ‘கத்தி’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் மேடையில் பாட்டுப் பாடி நடனம் ஆடினார்கள்.

இதில் நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், சமந்தா, சதீஷ், ஏ.எல்.விஜய், சௌந்தர்யா ரஜினிகாந்த், தாணு, விக்ரமன், மதன் கார்க்கி, ஆர்யா, சாந்தனு, எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.பி.சௌத்ரி, தனஞ்செயன், ஹிப்ஹாப் தமிழா ஆதி, அனிருத், தயாரிப்பாளர்கள் கருணாகரண், சுபாஷ்கரண் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Share |
Previous Page Next Page HOME