என் கணவரே எனக்கு மொட்டை போட்டுவிட்டார்: விஜய் ஆண்டனியின் மனைவி பேட்டி

நான் வெற்றிக்கு பின் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்திருக்கும் படம் சலீம். ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளார் விஜய். இவருடை நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா.  ''இப்போதைக்கு புகைப்படம் வேண்டாமே ப்ளீஸ்...'' என்றபடி பேச்சைத் துவக்கினார். காரணம், ஃபாத்திமாவின் மொட்டைத் தலை. கேன்சர் நோயாளிகளுக்கான 'விக்’ தயாரிக்க தன் முடியை தானம் வழங்கியுள்ளார் ஃபாத்திமா.

'ஹேர் ஃபார் ஹோப் இந்தியா’ அமைப்பின் தென் இந்திய அம்பாஸிடராக இருக்கும் இவர், ''சொன்னா நம்ப மாட்டீங்க. பியூட்டி சலூனுக்கு போய் மொட்டை போட்டா, ரேஸர், முடி சேகரிப்புனு அங்க சுகாதாரம் சரியா இருக்குமா, அது நோயாளிகளுக்குத் தரும் முடியாச்சேனு, என் கணவரே புது ரேஸர் வாங்கிட்டு வந்து, என் முடியை நாலு பாகமா கட்டி, அவரே மொட்டை போட்டுவிட்டார். அந்த முடியை நாலு கவர்கள்ல பேக் செய்து கொரியர் அனுப்பினப்போ, அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. மொட்டை போட்டு கிட்டத்தட்ட மூணு மாசம் ஆகுது. நிறைய பேர் இதுக்காக ஒரு பிரஸ் மீட் வெச்சு விழிப்பு உணர்வு கொடுக்க சொல்லி கேட்டிருக்காங்க. 'சலீம்' பட ரிலீஸ் சமயத்துல இதை செஞ்சா, தேவையில்லாத விளம்பரமா ஆகிடும். உண்மையான நோக்கம் மறைஞ்சுடும்னுதான் அதை தள்ளிப் போட்டேன். இப்பவும் மூணு மாசமா மீடியாவுக்கு நான் முகம் காட்டுறது இல்ல. கூடிய சீக்கிரம் ஒரு நல்ல தருணத்துல நான் இதைப் பத்தி எல்லார் கிட்டயும் பேசப் போறேன்'' என்று நெகிழ்ந்த ஃபாத்திமா, படத் தயாரிப்பாளராக பேச ஆரம்பித்தார்.

Tag: vijay antony,vijay antony news,vijay antony next movie news,vijay antony upcoiming movie list,

Share |
Previous Page Next Page HOME