சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்துக்கு வாழ்வு கொடுத்த ரஜினி மகள்

ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல அதிகாரி ஆனதும் பல அதிரடிகளை செய்துவருகிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். ஆம் இவர் பதவி ஏற்றதும் செய்த முதல் காரியமே யாரும் வாங்க முன்வராத கத்தி படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியதுதான். இப்போது அதே போன்று நல்ல காரியத்தை செய்திருக்கிறார் அவர்.

லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்தார். ஆனால் படம் வெளியாகி பப்படம் ஆகிய கதை நமக்கு தெரிந்ததே.இன்ரூ வரை சமூக வலைதலங்களில் அந்த படத்தை துவைத்து காயப்போட்டு வருவது கொடுமை.தற்போது லிங்குசாமி  நான்கு படங்களை தயாரித்து வருகிறார்.இதில் கமல் நடித்துவரும் உத்தம வில்லன் முக்கிய படம்.இந்த படம் விற்பனை செய்த்காலே அவரது பல பிரச்னைகள் காலி. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் படம் வேறு உள்ளது. அவரது கால்ஷீட் வீணாகிவிடுமோ என்று கவலைபடுகிறாராம் லிங்கு. காரணம் பொருளாதார சிக்கல் காரணமாக அந்த படம் இன்னும் துவக்கபடாமலேயே உள்ளது.

இந்த நேரத்தில்தான் லிங்குசாமிக்கு கை கொடுத்திருக்கிறார் சவுந்தர்யா. தான் பணியாற்றும் ஈராஸ் நிறுவனத்தின் சார்பாக உத்தம வில்லன் படத்தின் வெளியீட்டு உரிமையையும், இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத சிவகார்த்திகேயனினி ரஜினி முருகன் படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியிருக்கிறாராம்.

இப்போதுதான் லிங்குசாமி பழைய தெம்பில் இருக்கிறாராம்.


Tag: soundarya rajinikanth. Lingusamy, uththama villan, rajini murugan,

Share |
Previous Page Next Page HOME