ஐ நான் நடித்திருக்க வேண்டிய படம்: ரஜினி

ஐ பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ரஜினி பாடல்களை வெளியிட்டார்.

ஒரு மாடலின் வாழ்க்கையை மையப்படுத்தி ஐ கதை உருவாகியுள்ளது. இந்த படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். இப்படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது, இந்த மாடல் கதையை எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பே ஷங்கர் என்னிடம் கூறினார். மாடலாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவன், முன்னணி மாடலாக வருவது போன்று சித்தரிக்கப்பட்ட அந்த கதையை கேட்ட நான், கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நானெலலாம் மாடலாக நடித்தால் சரி வராது என்று சொல்லி மறுத்து விட்டேன் என்றார்.
அதன் பிறகு தான் எந்திரன் கதையை சொன்னாராம் ஷங்கர். இதை ஐ பட விழாவின்போது சொன்ன ரஜினி, இப்போது விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தாலும், முன்பே ஷங்கர் என்னிடம் அந்த கதையை சொன்னபோது நான் ஓ.கே சொல்லியிருந்தால் நான்தான் இந்த கதையில் நடித்திருப்பேன் என்றார் ரஜினி.

Tag: ai movie news, rajini latest news,ai audio release function,

Share |
Previous Page Next Page HOME