இளையராஜா குறித்து மிஷ்கின் கூறிய கருத்தால் முகம் சுழித்த பொதுமக்கள்

இயக்குனர் மிஷ்கின் தன்னுடைய நந்தலாலா படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்று கூறி பிடிவாதமாக அவரை சம்மதிக்க வைத்தார். பின் ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் இனி மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று இளையராஜா கூறியதாகவும் செய்திகள் உண்டு. அதன்பின் மீண்டும் சமாதானம் செய்து தன்னுடைய ஓ நாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு இசையமைக்க வைத்தா மிஷ்கின்.
அதுமட்டுமின்றி என் அப்பாவை விட நான் மிகவும் மதிப்பது இளையராஜாவைத் தான் என்று விழாக்களில் எல்லாம் கூறிவந்தார் மிஷ்கின். ஆனால் சமீபத்தில் அவர் நேர்காணலில்  மக்களிடையே பேசினார். அப்போது ஒருவர் ‘இளையராஜா அவர்களிடம் ஏன் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரியவில்லை’ என்று கேட்டாராம். அதற்கு அவர் ‘இளையராஜா இன்னும் சில நாட்களில் இறந்து விடுவார், பிறகு என்ன செய்வது’ என்று கூறினாராம். இது அங்கிருந்த மக்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியதாம்.

Tag: ilayaraja,miskin,

Share |
Previous Page Next Page HOME