முன்னணி ஹீரோக்கள் யாரும் பங்கேற்காத உண்ணாவிரத போராட்டம்


ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத தமிழ் சினிமா பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நோிடும் என்ற காரணத்தை உணா்ந்ததாலே என்னவோ! இந்த மௌன உண்ணாவிரதம். அல்லது மனதார ஆதரவு தொிவித்து கூட நடக்கிறதோ இன்னவோ!

முதல்வா் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில், முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காத குறையைத் தீர்த்து வைத்தனர் சூர்யா, விக்ரம், கார்த்தி போன்றவர்கள். விஜய், அஜீத் போன்றவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவருமே இன்று உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.


அதற்குள், ‘நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடக்கும் இந்த உண்ணாவிரதம் சட்ட விரோதமானது. நீதிமன்ற அவமதிப்புக்குள்ளானது. இதற்கு அனைவரும் பதில் சொல்ல நேரிடும்’ என்றெல்லாம் புரளியை கிளப்பிவிட்டுவிட்டார்கள் கோடம்பாக்கத்தில். அப்புறமென்ன?  அனைவரும் சிட்டாய் பறந்து போய்விட்டாா்கள் போல.

மூத்த கலைஞர்கள், ஆளுங்கட்சி பிரமுகா்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் மட்டுமே திரண்டு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனா். மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கலைஞர்கள் என்று யாருமில்லையே என பேச ஆரம்பித்துவிட்டனர் நடிகர் நடிகைகளைப் பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் வந்திருந்த மக்கள். இந்த நிலையில், உண்ணாவிரதத்தில்  பங்கேற்ற மதியத்துக்கு மேல் வந்தனர் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம், சூரி ஆகியோர். அவர்களைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவும் வந்தார். முன்னணி நடிகைகள் ஒருவர் கூட இதுவரை வரவில்லை. வருவார்கள் என்றும் நம்பிக்கையில்லை. கடைசி நேரத்தில் மேலும் சில முன்னணி நடிகர்கள் ஆஜராகக் கூடும்.

Share |
Previous Page Next Page HOME