புதுமுகங்கள் நடிக்கும் “ இஞ்சி முறப்பா “
புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம்
சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும்
படத்திற்கு “ இஞ்சி முறப்பா” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில்
ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். மற்றும் புதுமுகம் கிருஷ்ணா,
ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா
ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு
- P.R.K. ராஜு
யுகபாரதி பாடல்களுக்கு மணிசர்மா இசையமைக்கிறார்.
எடிட்டிங் - ஹரி
கலை - ஹரி.K
நடனம் - சொர்ணா / ஸ்டன்ட் -
நந்து
தயாரிப்பு நிர்வாகம்
- வாசு / நிர்வாக தயாரிப்பு -
ராஜு
தயாரிப்பு - மலர்கொடி முருகன், A.P.ராதாகிருஷ்ணன்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - S. சகா இவர் திரைப்பட கல்லூரியில்
பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி அவரிடம் கேட்டோம்.....
தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று
அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்யாகிப் போகிறது !
தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்க அண்ணன் எடுக்கிற
முடிவுதான் கதை !
பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறோம் என்றார் இயக்குனர்.
படப்பிடிப்பு சென்னை, பாண்டி மற்றும் ஆந்திராவில்
நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
Tags: இஞ்சி முறப்பா படத்தின் ஸ்டில்ஸ், இஞ்சி முறப்பா புதிய ஸ்டில்ஸ், இஞ்சி முறப்பா விமா்சனம், தமிழ் சினிமா செய்திகள், inji murappa movie, inji murappa movie previews
![]()



