மியூசிக் டைரக்டராக அவதாரம் எடுக்கும் ஆன்ட்ரியா? - andriya new music director



இப்பொழுது இசை உலகில் பல மாறுதல்கள் வந்து விட்டது. என்ன? புாியவில்லயா? ஆமாங்க! கம்ப்யூட்டர் மூலம் மியூசிக் போட ஆரம்பித்த பின்பு தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் தான் என்னவோ! நினைத்த மாத்திரத்தில் ஆள் ஆளுக்கு மியூசிக் போட கிளம்பி விட்டார்களா என்னவோ! இந்த மியூசிக் வந்தால்தான் கா்நாடகமாவது? சங்கீதமாவது?

இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்து அவா்கள் போடும் மியூசிக் சில சமயம் காதுக்கு தேன் பாயுவது போல இருக்கிறது. சிலரது இசை காது கிழிக்கிற அளவுக்கு கொடூரமாக இருக்கிறது. இதையெல்லாம் ரசிக்க வேண்டும் என்பது ரசிகா்களின் தலையெழுத்தோ என்னமோ!

இப்படி இவங்கஎல்லாம் இசையமைப்பாளராக களம் இறங்குவதற்கான காரணம் அதிகமான சம்பளம் தான். இசையமைப்பாளா்கள் பாடல்கள் ஹிட் அடித்த உடனே, சம்பளத்தை அதிகமாக ஏற்றி விடுவது தான் முதல் காரணம்.  

டைரக்டர் எஸ்.ஜே. சூர்யா இயக்கி வரும் இசை படத்திற்கு முதல் முறையாக இசையமைத்து இருக்கிறார். அப்படி என்ன விதமான மியூசிக் போட்டு கலக்கி இருக்கிறார் என்றே தெரியலங்க! அதற்கு சில நாட்கள் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இன்னமொரு அதிர்ச்சியான செய்தி என்னவென்றால்! தனுஷின் அப்பா கஸ்துரிராஜாவே கூட ஒரு மியூசிக் டைரக்டர்தான் என்பது அச்சத்தை வரவழைக்கும் இன்னொரு நியூஸ்.

இது இசையுலகத்திற்கு வந்த மற்றுமொரு இனிய செய்தி வந்துள்ளது. அடடே! முறையாக கா்நாடக சங்கீதத்தை கற்றுள்ள நடிகை ஆன்ட்ரியா புதியதொரு படத்திற்கு இசையமைப்பாளராக கலக்க உள்ளராம். பியானோவை முறைப்படி கற்றவராம். நல்ல குரல் வளம் கொண்டவா். போதுமே இசையமைப்பதற்குரிய வழிகள். இவரை இசையமைப்பாளராக களம் இறக்குவதற்கு கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறார்கள். 



andriya new music director, latest tamil cinema news, தமிழ் சினிமா செய்திகள்,  ஆன்ட்ரியா,

Share |
Previous Page Next Page HOME