மேற்கு வங்க அரசியல்வாதிகளை தற்போது புரட்டி போட்டுள்ள விவகாரம் என்ன தெரியுமா? சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு தான். ஏறக்குறைய சுமார் 17 லட்சம் பேரிடம் ரூ6,600 கோடி வசூலித்து யாருக்கும் பணத்தை திருப்பிக்கொடுக்கமால் மோசடி செய்தது சாரதா சிட்பண்ட் குழுமம். இந்த விவகாரம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் மேற்குவங்கம், அஸ்ஸாமை, மிசோரம் உட்பட வடகிழக்கு மாநிலங்களை பெரும் புயலாக வீசிவருகிறது. குறிப்பாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியினருக்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறறது. இந்நிலையில் இந்த மோசடி வழககில் பல முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து சிக்கியுள்ளனர்.
அதில் மும்பை பங்குச் சந்தை தரகர் சந்த்ரத்தன் பரீக்கை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏடி குழும உரிமையாளர், மும்பையில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகளுடன் பார்ட்டிகளில் கலந்து கொண்டு பல கோடி ரூபாய் செலவழித்தார் என்று கூறியுள்ளார். .சன்னிலியோனுக்கு 2 மணி நேரத்துக்காக ரூ40 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாகவும் பரீக், சிபிஐ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்
![]()



