அஞ்சான் விமா்சனம் - anjaan review


ஹீரோவோட அண்ணன் ஒரு மாபியா கேங்க் லீடா்.கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் ஹீரோவான தம்பி கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா. அண்ணன் மற்றும் அவருடைய ஃபிரண்ட் இருவருக்கும் எதிரிகள் அதிகம். இது மட்டுமில்ல போலிஸ் கமிஷனா் பொண்ணையே தூக்கி மிரட்டிடறாங்க.

அண்ணனோட ஃபிரண்டை யாரோ போட்டுத்தள்ளிடறாங்க. போலிஸ் கமிசனரா? அந்த கேங்க் லீடரா? கூடவே இருந்த துரோகியா? யார் எதிரி? என்பது மீதிக்கதை.

அந்த தீக்குச்சி ஸ்டைல், நடை எல்லாம் கலக்கல். நாயகி சமந்தா தங்கச்சிலை போல அழகு பதுமையாக வந்து கொஞ்சம் கூட வஞ்சனை இல்லாமல் படு கிளாமராக வந்து அசத்திட்டாங்க. சிங்கிள் பீஸ் டிரஸ்ஸில் ஸ்லோ மோசன் சீன்ல ஒடி வரும் அழகே தனி தான்ங்க! படம் முழுவதும் அரை டவுசரோடு வலம் வருகிறார். ஹீரோவோட அண்ணனின் நண்பனாக வரும் துப்பாகி பட வில்லன் செய்யும் ஒரு சண்டை காட்சிக்கு தியேட்டரில் கைதட்டல் அரங்கே அதிருகிறது.

ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார்.ஏற்கனவே கல்யாணத்தை விரும்பாத ஜீவா

இதை சாக்காக வைத்து கல்யாணத்தை நிறுத்துகிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல்

ஏற்படுகிறது. இதற்கிடையில் மும்பையில் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய்.

இதில் கோவமடைந்த சந்துருவும், ராஜூபாய்யும் இம்ரான் கடத்தி எச்சரித்து அசிங்கப்படுத்துகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அனுப்புகிறார். இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.

கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.

அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றேன் என கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும்

கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. அது என்ன திருப்பு முனை என்பதை திரையில் காணவும்…

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட், பின்னனி இசையிலும் பின்னி எடுத்திருக்கிறார் யுவன் சபாஸ் ஜி.சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஆக்ஸன், காதல் என அனைத்தையும் மிக அழகாக காட்டியிருக்கிறது.

மாஸ் ஹிட்டை கொடுக்க வேண்டும் என நினைத்த லிங்குசாமி கதைகளத்தை சரியாக அமைக்கவில்லை என்பது தான் வருத்தம்,

விறுவிறுப்பு இல்லாமல் எளிதாக கணிக்ககூடிய திரைக்கதையாக நகர்கிறது படம்.

அஞ்சான் மொத்தத்தில் அறைகுறை நோஞ்சான்.

anjaan movie revie, .அஞ்சான் விமா்சனம், அஞ்சான் திரைவிமா்சனம், சூா்யா, சமந்தா, anjaan preview, anjaan stills, anjaan news

Share |
Previous Page Next Page HOME