சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு காமெடி நடிகர்கள் வருவது அதிகரித்து வருகிறது. எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி, மா.பா.கா ஆனந்த், என பெரிய பட்டியல் இருக்கிறது. இப்போது இந்த வரிசையில் வருகிறார் விஜய் டி.வியில் ஆபீஸ் தொடரில் காமெடி வேடத்தில் நடித்து வரும் விஷ்ணு.
வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: டி.வியில் கிரியேட்டிவ் ஹெட்டாக வரவேண்டும் என்பதான் என்னோட ஆசையாக இருந்தது. நிகழ்ச்சி இயக்குனர், தயாரிப்பாளர் நிலைக்கு வந்தேன் அப்போதுதான் கனா காணும் காலங்கள், கல்லூரியின் கதை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் சொதப்பினாலும் அப்புறம் நன்றாக நடிக்க கற்றுக் கொண்டேன். ஆபீஸ் தொடரில் என் நடிப்புக்கு மக்கள் தரும் ஆதரவு ஆச்சர்யமா இருக்கிறது. சின்னத்திரையிலும் காமெடி பண்ண முடியும் என்பதை நான் நிரூபித்திருப்பதாக சொல்கிறார்கள்.
பூலோகம், என்னமோ ஏதோ படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்தேன். ஆபீஸ் தொடரைப் பார்த்துதான் வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரன் வாய்ப்பு வந்தது. சோலோ கமெடியன் கேரக்டர். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்கிறார் விஷ்ணு.

![]()