அறிவிப்பு! விஷ்வரூபம் -2 வெளியீட்டுத் தேதி

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, இயக்கியிருக்கும் விஷ்வரூபம் -2 படத்தின் வெளியீட்டுத்தேதி ஏறக்குறைய அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே மாதம் 9 ஆம் தேதி இப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் விஷ்வரூபம் -2. கடந்த ஆண்டு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து இதன் முதல் பாகமான விஷ்வரூபம் வெளியாகி மாபெரும் சாதனை படைத்தது. கடந்த ஆண்டில் அதிகமாக வசூலைக் குவித்த தமிழ்த் திரைப்படமாகவும் விஷ்வரூபம் திரைப்படம் கலக்கியது.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் விஷ்வரூபம் -2 திரைப்படமும் பெரும் வெற்றிபெரும் என்று ரசிகர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என வெளியாகும் அனைத்து மொழிகளிலும் ஆரோ 3D ஆடியோவில் வெளியாகவுள்ளது.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆண்ட்ரியா, பூஜா குமார், ஷேகர் கபூர், நாசர் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆஸ்கார்
பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.

Share |
Previous Page Next Page HOME