இசையமைப்பாளர் டி.இமான், தான் இசையமைக்கும் படங்களில் அந்த படத்தின் ஹீரோவை பாடவைக்கும் முயற்சியில் ஈடுபடுவார். விஜய்யை தமிழன் மற்றும் ஜில்லா படங்களில் பாட வைத்தார். சிவகார்த்திகேயனை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் பாட வைத்தார். தற்போது அவர் கையில் சிக்கியிருப்பது நடிகர் விமல்.
நடிகர் விமல் நடித்து வரும் ஒரு ஊர்ல ஒரு ராஜா படத்திற்காக இசையமைத்து வரும் டி.இமான் ஒரு பாடலை கம்போஸ் செய்துவிட்டு, இந்த பாடலை விமலையே பாட வைத்துவிடலாம் என இயக்குனர் ஆர்.கண்ணனிடம் ஆலோசனை கூறியுள்ளார். பாட்டெல்லாம் எனக்கு பாட வராது என்று விமல் தப்பித்துக்கொள்ள முயற்சித்தும் அவரால் முடியவில்லை. நீங்கள்தான் பாடவேண்டும் என கட்டாயபப்டுத்தி ஒரு பாடலையும் பாடவைத்துவிட்டார் டி.இமான்.
பழைய படங்களில் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி, சந்திரபாபு போன்ற கலைஞர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் உள்ள பாடல்களை அவர்களே பாடுவார்கள். அந்த பாடலில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அதேமுறையை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டுவர இருப்பதாக டி.இமான் கூறுகிறார். முதலில் ஒரு பாடலை பாடவைத்துவிட்டால் பின்னர் அவர்கள் தாங்களாகவே ஆர்வம் வந்து அடுத்தடுத்த படங்களில் பாட முன்வருவார்கள் என்றும் டி.இமான் கூறினார்.

![]()