வல்லினம் திரை விமர்சனம்

ஒரு சிலருக்கு வாழ்க்கையே விளையாட்டா இருக்கும், ஆனா இந்த வல்லினத்தில் விளையாட்டு தான் வாழ்க்கை. ஆனா இந்த வல்லினத்தில் விளையாட்டையே வாழ்க்கையாக வைத்திருக்கும் ஒருவனை பற்றியது தான். இந்த உலகத்தில், ஏன் இந்த நாட்டில் எத்தனையோ விளையாட்டுகள் இருக்கின்றது. ஆனால் கிரிக்கெட் என்ற ஒன்ற வார்த்தைக்கு இருக்கு மரியாதை வேறு எந்த விளையாட்டுக்கும் இல்லை. அதை மையாமாக வைத்து கிரிக்கெட்டையும் தாழ்த்தாமல் மற்ற விளையாட்டையும் தாழ்த்தாமல் அழகாக இந்த கதையை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அறிவழகன்.

ஒரு கல்லூரியில் படிக்கும் நகுலும், கிருஷ்ணாவும் திக் ப்ரண்ட்ஸ் இவர்களுக்கு எப்பவுமே கூடைபந்து ஆடுவது தான் வேலை. படிப்பை தவிர இந்த கூடைபந்தை பிடித்து விளையாடிய பழகிய இவர்கள் ஒரு டோர்ணமெண்ட்க்கு தயாராகிறார்கள். இதில் கிருஷ்ணா இதய பலவீனமானவன் என்பது தெரிந்தும் எதேர்ச்சியாக நகும் பாஸ் பண்ணும் பந்து கிருஷ்ணாவின் மார்பில் பட்டு விடுகிறது இதனால் கிருஷ்ணா உயிர் இழக்கிறார். நண்பனின் சாவிற்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்வோடு அந்த காலேஜ்ஜை விட்டு சென்னையில் வந்து படிக்க கிளம்புகிறார். இரயில் நிலையத்தில் ஆதி சொல்லும் அத்தனை வசனங்களும் மனதில் அச்சுபோல பதிந்து விட்டது. நீ நேசிக்கிற எதுவும் உன்னை விட்டு அவ்வளவு எளிதில் போகாது... என்கிறார் ஆதி. சென்னையில் நேஷனல் ஆர்ட்ஸ் காலேஜ்ஜில் 2ம் ஆண்டு சேர்கிறார். இவரை முதலாம் ஆண்டு மாணவன் என்று நினைத்து இவரை ரேகிங் செய்கிறார்கள் சீனியர்கள். அந்த ரேகிங்கே அவர்களை நகுலுக்கு நண்பர்களாக்கிவிட தன் நண்பர்கள் கூடைபந்து விளையாடுபவர்கள் என்று தெரிந்தும் அதில் மூக்கை நுழைக்காமல் சம்பந்தமே இல்லாததுபோல் அந்த விளையாட்டை விட்ட விலகியே செல்கிறார்... எந்த நண்பனுக்காக அந்த விளையாட்டை கைவிட்டாரோ, மீண்டும் நண்பர்களுக்காக அந்த பந்தை கையில் எடுக்கிறார்... நேஷனல் காலேஜ் சேர்மன் மற்றும் கிரிக்கெட் அணியின் கேப்டனாக வரும் சித்தார்துக்கும் நகுலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் கிரிக்கெட்டுக்கும், கூடைபந்துக்கும் போட்டி ஏற்பட அதில் யார் வெற்றியடைந்தார்கள் என்பது தான் கதை...

ஈரம் என்ற கவிதையை தந்த அறிவழகன் தனது அடுத்த படைப்பாக தந்திருக்கும் படம் வல்லினம்... நகுலும், அறிவழகனும் இந்த ஆண்டின் மிக முக்கிய படங்களின் வரிசையில் இந்த படத்தையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். திரைக்கதையிலும், ஒளிப்பதிவிலும் அவ்வளவு அழகு, படத்திற்கு ஸ்பீட் பிரேக்காக வருவது நடிகை மிருதுளாவின் எக்ஸ்பிரஷன்ஸ் தான். நகுலுக்கு மிருதுளாவிற்கும் இடையே காதல் ஒரு பலூனுக்குள் இருக்கும் காற்று மாதிரி திடீர்னு காணாமல் போய்விடுகிறது... நகுலின் நண்பர்களாக வரும் ஜெகன், குணா, சாய் மூவருமே படத்திற்கு ஊந்துகோலாக இருக்கிறார்கள்... க்ளைமேக்ஸில் வரும் அந்த கூடைபந்து மேட்ச் நம்மை சீட் நுனியில் உட்கார வைப்பது உறுதி....

கில்லி, சென்னை 28, வெண்ணிலா கபடிக்குழு போன்ற விளையாட்டை மையமாக வைத்து வந்த படங்கள் என்றுமே மக்கள் மனதில் நன்றாக பதிந்துவிடுகிறது என்பதை புரிந்து வைத்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். தனது இரண்டாவது படியை எளிதில் கடந்து விடவேண்டும் என்ற அச்சமும், பொருப்பும் இருப்பது நன்றாகவே தெரிகிறது... வழக்கமான சினிமா பாணியில் தான் இந்த படமும் இருந்தாலும் இதில் அறிவழகன் சொல்ல வந்திருக்கும் கருத்து மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று அதற்காகவே அறிவழகனுக்கு ஒரு சபாஷ்....

இசை காலேஜ் பாடல் மட்டுமே மனதில் நிற்கிறது. பின்னணி இசையில் எந்த குறையும் இல்லை... ஒளிப்பதிவில் பாஸ்கரும் பின்னி இருக்கிறார்... மக்கள் மனதில் கிரிக்கெட் என்ற ஒற்றை சொல் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறதோ அந்த அளவுக்கு மற்ற விளையாட்டுகளும் போய் சேர வேண்டும் என்று எண்ணி இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்...

Share |
Previous Page Next Page HOME