ரஜினியே அழைத்தாலும் அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன். அனிருத்

வளர்ந்து வரும் முன்னணி இசை அமைப்பாளர்களில் குறிப்பிட்டு சொல்லும்படி தனது திறமையை வளர்த்து வருபவர் அனிருத்.  3 படத்தில் ஆரம்பித்த அவரது இசைப்பயணம், விஜய்-முருகதாஸ் படம் வரை தொடர்ந்து வெற்றிகரமாக நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் ரஜினியின் படங்களுக்கு அனிருத் இசையமைப்பாரா? என்ற செய்தி ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டு இருக்கின்றது. ரஜினியின்நெருங்கிய உறவினர்தான் அனிருத் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்நிலையில் ரஜினியின் படங்களுக்கு இசையமைப்பது குறித்து அனிருத் தற்போது ஒரு விளக்கம் தெரிவித்துள்ளார். ரஜினி தன் படங்களுக்கு இசையமைக்க என்னை அழைத்தால் கண்டிப்பாக நான் அவர் படத்துக்கு இசையமைக்க மாட்டேன். அவருடைய உறவினர் என்பதால், அந்த உறவை பயன்படுத்தி நான் வாய்ப்பு பெற்றதாக பேசக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும். ரஜினியின் பட இயக்குனர் என்னிடம் நேரடியாக கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர் படங்களுக்கு இசையமைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Share |
Previous Page Next Page HOME