தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது விக்ரமை வைத்து “ஐ” படத்தை இயக்கி வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.
இந்த படத்தை முடித்தபின்பு ஒரு சரித்திர படத்தை இயக்குகிறாராம் ஷங்கர். இதற்காக புராணக்கதைகளில் ஷங்கரை அதிகம் பாதித்த கதாபாத்திரமான கர்ணனை மையமாக வைத்து ஒரு சரித்திர கதையை தயார் பண்ணி விட்டாராம்.
அதில் கர்ணனாக நடிக்க பொருத்தமான நடிகர் யார் என்று பரிசீலனை செய்து, மலையாள நடிகர் மம்மூட்டியை பிரதான கதாபாத்திரமாக வைத்து அந்த படத்தை இயக்குகிறாராம்
அவர் அடுத்து, ரஜினியை தான் இயக்குவார் என்று பெரும்பாலான தகவல்கள் வெளியாகும் நிலையில் இந்த தகவலும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

![]()