விஜய் அவருடைய ரசிகரை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர், நடிகைகளை ரசிகர்கள் பார்த்தால் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பது வழக்கம். இந்த துள்ளலோடு மட்டுமல்லாமல் அவர்களிடம் கை குலுக்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவர். இது ஒருபுறம் என்றால் நேரில் சென்று நடிகர்களை பார்ப்பவர்கள் அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
அப்படித்தான் சமீபத்தில் நடிகர் விஜய்யை ரசிகர்கள் சிலர் நேரில் சென்று பார்த்தார்களாம். வந்தவர்களை இன்முகத்தோடு வரவேற்ற விஜய் அவர்களோடு புகைப்படம் எடுத்திருக்கிறார். அப்போது ஒரு ரசிகர் விஜய்யை பார்த்த உற்சாகத்தில் அவரது கன்னத்தை குழந்தைகளை பிடிப்பது போல் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் எரிச்சல் அடைந்த விஜய் உடனே அவரை தாக்கிவிட்டாராம். தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய் அது முடிந்த பிறகு கோபமாக உள்ளே சென்றிருக்கிறார். இதைகண்ட அவருடைய தந்தை என்ன நடந்தது என்று கேட்டு பாதுகாவரை திட்டி தீர்த்து விட்டாராம்.
பொதுவாக விஜய் எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ரசிகர்களை என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள் என்று கூறுவது வழக்கம். இதுதான் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு கொடுக்கும் மரியாதையா என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

![]()