பொதுவாகவே அஜீத் மீது அ.தி.மு.க வை சேர்ந்தவர்களுக்கு ஒரு அன்பு பார்வை உண்டு. பிரபல புலனாய்வு இதழான ஜுனியர் விகடனே ஒருமுறை இவரை அதிமுக அனுதாபி என்று திட்டவட்டமாக கூறியிருந்தது. அதை உறுதி செய்வதை போல மிரட்றாங்கய்யா… என்று அவர் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி முன்பாக பேசி, ஒரே நள்ளிரவில் நிஜ ஹீரோவாகவும் ஆனார். (அதற்கப்புறம் க-னா கட்சிக்காரர்கள் பர்சனல் போனில் வந்து கடைந்தெடுத்து அவருக்கு கடப்பாரை பஞ்ச் கொடுத்தது தனி கதை)
அன்றிலிருந்து இன்று வரை அதிமுக வின் செல்லப்பிள்ளை என்றே கருதி வந்தவர்களை சற்றே ஜெர்க் அடிக்க வைத்திருக்கிறார் அஜீத். எப்படி?
வீரம் படத்தின் வியாபாரத்தை கூட அஜீத்தே முன்னின்று வழிகாட்டியதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை வேறெங்கும் விட்டுவிடுவாரா என்ன? படத்தை ஜெயா தொலைக்காட்சிக்கு கொடுங்க என்று கூறிவிட்டாராம் தயாரிப்பாளரிடம். அவர்களும் கர்ம சிரத்தையாக ஜெயா தொலைக்காட்சிக்கு கொடுத்துவிட்டார்கள்.
இருந்தாலும், முன்னாள் ஆளுங்கட்சியை பகைத்து கொள்வதும் நல்லதற்கு இல்லையே? கலைஞர் தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுங்க. அதுவும் தாராளமா கொடுங்க என்றாராம். மற்ற சேனல்களை விட இவர்களுக்கு அதிக தொகை வழங்கப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறது ஏரியா.
இந்த டெக்னிக் விஜய்க்கு தெரிஞ்சுருந்தா வந்திருக்குமா வம்பு?

![]()