நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இளைய தளபதி விஜயின் ஜில்லா திரைப்படம் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வருடம் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான துப்பாக்கி திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியின் இப்புதிய படம் உருவாகவுள்ளது. துப்பாக்கி திரைப்படம் வசூலில் கொடிகட்டிப் பறந்ததுடன், விஜய் -
ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவருக்குமே முக்கியப்படமாக அமைந்தது.
பிப்ரவரியில் கல்கத்தாவில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் பத்து நாட்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்று ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அப்போ இந்த முறை பீரங்கியை எதிர்பார்க்கலாமா என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

![]()