“கலவரம்” பொங்கல் வெளியீடு

ரமேஷ்செல்வம் இயக்குகிறார் யுனிவர்சல் புரடக்சன் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “கலவரம்”

இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட தோட்றத்தில் சத்யராஜ் ஒரு விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். மற்றும் அஜய் ராகவ், குட்டி, யாசர், தணிகல பரணி, நந்தா, சரவணன், சுஜிபாலா,ராஜ்கபூர், மயில்சாமி, இன்பநிலா, லாவண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – பி.சந்திரன் Bsc, DFT

இசை – எப்.எஸ்.பைசல்

எடிட்டிங் – மாரீஸ்

கலை – மகேஷ்

தயாரிப்பு நிர்வாகம் – பிரகலாதன் , எஸ்.கே.சுப்பையா

தயாரிப்பு மேற்பார்வை – சீர்காழி சிவசங்கர்

இனைதயாரிப்பு – கே. என். ரகு

தயாரிப்பு – டி.ஆர்.ரவிச்சந்திரன்

கதை, திரைக்கதை, வசனம் , இயக்கம் – S.D.ரமேஷ்செல்வம் B.com, DFT

படம் பற்றி இயக்குனர் ரமேஷ்செல்வம்……

ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதியே “கலவரம்” ஒரு உண்மை கலவரத்தின் சம்பவத்தை மையமாக கொண்டும், அரசியல் நெரிகளின் உண்மை ரூபங்களையும் கருவாக கொண்டு அதை சினிமாவாக மாற்று முயற்சியே இத்திரைப்படம்.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையை கண்முன் நிறுத்தும் ஒரு முயற்சி இத்திரைப்படம்.இதில் உண்மைக்கு மிக நெருக்கமாக பயணிப்பதே இந்த படத்தின் திரைக்கதையின் சிறப்பு. ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலை முதல், பின் அச்சம்பவ களத்தின் உண்மை முகங்களை வெளிச்சமிட்டு காட்டுவத்தே இக் “கலவரம்”

இந்த படத்தில் கானாபாலா ஒரு பாடல் எழுதி ,பாடி, நடித்துள்ள
சொய்யாங் சொய்யாங் என்ற பாடல் காட்சி பக்கா கமர்ஷியலாக இருக்கும். என்றார் இயக்குனர்.

படம் இந்தமாதம் பொங்கல் திருநாளில் வெளியாகிறது.

Share |
Previous Page Next Page HOME