ரசிகர்களை ஏமாற்றுகிறதா ஜில்லா டீம்

வீரம், ஜில்லா படங்கள் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கு, வீரம் படத்திற்கு ஏற்கனவே தணிக்கை சான்றிதழில் யு சர்டிபிகேட் கொடுத்து வரிவிலக்கும் அளித்துவிட்டார்கள், ஆனால் இன்னும் ஜில்லா படத்துக்கு இன்னும் வரிவிலக்கு கிடைக்கவில்லை, கடந்த சில தினங்களுக்கு முன் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் ஜில்லாவுக்கும் யு சர்டிபிகேட் கொடுத்தனர்.

ஆனால் இன்னும் வரிவிலக்கு கிடைக்காமல் இருக்கிறது ஜில்லா படம். தலைவா படத்திற்கும் இதேபோல் வரிவிலக்கு கிடைக்காமல் பிரச்சனை இழுத்து வந்தது. ஜில்லாவுக்கும் அதே நிலைமை வந்துவிடுமோ என்று கலக்கத்தில் உள்ளனர் ஜில்லா படக்குழுவினர்.

ஜில்லா படம் சம்பந்தமான வெளிவராத சில தகவல்கள் உங்களுக்காக, பொதுவாக ஒரு படம் ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே படத்தின் எடிட்டிங் வேலைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருப்பது வழக்கம், ஆனால் ஜில்லாவுக்கு எடிட்டிங் வேலைகள் தொடங்காமலே படத்தை ஷுட் செய்து கொண்டே இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஜப்பான் விசா கிடைக்காமல் இரண்டு வாரங்கள் பட வேலைகள் முடங்கி கிடந்தன.

படம் துவங்கும் போது P.C.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் ஒளிப்பதிவாளர் ப்ரியனின் சிபாரிசால் கணேஷ் ராஜவேல் ஒளிப்பதிவாளராக மாற்றப்பட்டார். இப்படி வெரும் படப்பிடிப்பை மட்டுமே நடத்து வந்திருந்ததால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share |
Previous Page Next Page HOME