அஜித் படத்தை இரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு

‘வீரம்’ தெலுங்கு வெளியீடு இரண்டு வாரங்கள் தள்ளிப்போட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வீரம் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இதே நாளில் ‘வீரம்’ படத்தின் தெலுங்கு பதிப்பையும் முதலில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ஜனவரி 10ம் தேதி ஆந்திராவில் சங்கராந்தியை ஒட்டி மகேஷ்பாபுவின் ‘1’ படமும், ராம்சரண் தேஜாவின் ‘யவடு’ படமும் வெளியாகவிருப்பதால் திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘வீரம்’ தெலுங்கு டப்பிங்கை இரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வீரம் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு “வீருடொக்கடே” என்று பெயர் வைத்துள்ளனர்.

Share |
Previous Page Next Page HOME