சிம்புவுடன் நடிக்க தூதுவிட்ட நடிகை….கண்டுகொள்ளாத சிம்பு!

உங்களுக்குப் பிடித்த நடிகை யாரென்று சிம்பு விடம் கேட்கும்போதெல்லாம், இந்த பிரபல நடிகையின் பெயரையே பலமுறை பதிலளித்திருக்கிறார் அவர். அவ்வளவு அருமை பெருமைகளைக் கொண்ட அந்த சினேகா உல்லால் ஆந்திரா சினிமாவின் ஆனந்த யாழ். ஆனால் விதி யாரை விட்டது?

சமந்தா மாதிரியே இவருடைய சருமத்திலும் ஏதோ பிரச்சினையாம். ஊடகங்கள் இந்த விஷயத்தைப் பெரிது படுத்துவதற்கு முன்பாகவே வேறு ஏதேதோ காரணங்கள் சொல்லி இரண்டு வருடங்கள் புதுப்படங்களைச் சீண்டவேயில்லை இவர்.

இப்போது எல்லா சங்கடங்களையும் மருத்துவத் தால் வென்றெடுத்த சினேகா உல்லால், சென்னைக்கு சிக்னல் அனுப்பினாராம். சிம்புக்கு அனுப்பப்பட்ட இந்த சிக்னலுக்கு எதிர்முனையில் பதிலே இல்லையாம். இதனால் அம்மணி ரொம்ப வருத்தத்தில் இருப்பதாகக் கேள்வி.

Share |
Previous Page Next Page HOME