இந்த போஸ் வின் டீசல் என்ற ஹாலிவுட் நாயகன் தன்னுடைய படத்திற்கு கொடுத்த போஸ், அதை அப்படியே உருவி ஜில்லாவில் வைத்து விட்டார்கள்.
தெரிந்து வைத்தார்களோ அல்லது தெரியாமல் வைத்தார்களோ தெரியாது. ஆனால் அப்படத்தை அப்படியே உருவி தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் அப்படத்திற்கு அப்படியே தி.மு.க கொடியையும், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படத்தையும் போட்டு விஜய் தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்வது போல் இணையங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிவிட்டுள்ளார்கள்.
தலைவாக்கு வாங்கிய அடி போதாதா என விமர்சனங்களும் இப்படங்களுடன் வெளிவரத்துவங்கியுள்ளது. இச்செய்தி இதுவரை விஜய்க்கு தெரியுமா அல்லது தெரியாதா என்றெல்லாம் அறிய முடியவில்லை. ஆனால் தெரிய வேண்டிய இடத்திற்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறோம்.
ஆக தலைவாவுக்கு கிடைத்த வரவேற்பு?! இந்த படத்திற்கும் கிடைக்குமா என கலங்கி நிற்கின்றதாம் தயாரிப்பு தரப்பு! காப்பி அடித்த போஸ் இப்படி அடுத்த ஆப்பு வைக்கும் என எதிர்பார்த்திருப்பாரா விஜய்?
![]()



