சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோல்லி நடித்தது ஏன்: பிந்து மாதவி விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் பிந்து மாதவி.
வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமான பிந்து மாதவிக்கு, கேடி பில்லா கில்லாடி ரங்கா நல்லதொரு இடத்தை அமைத்துக் கொடுத்தது.
இதனையடுத்து தமிழ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்கு ஏற்றாற் போன்று மாறி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
எப்படி இந்த வேடத்துக்கு ஒப்புக்கொண்டார் என்று சிலர் மண்டையை குழப்பிக்கொள்கின்றனர்.
நிறைய படங்களில் கெஸ்ட் ரோல் வந்தும் ஏற்காத பிந்து மாதவி இப்படத்தில் நடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர்தானாம்.
தனது திரையுலக வாழ்க்கையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என்ற 2 படத்தை தயாரித்த நிறுவனம் இப்படத்தையும் தயாரிப்பதால் அவருக்கு நன்றி விசுவாசம் காட்டவே கெஸ்ட்டாக நடித்தாராம்.

Share |
Previous Page Next Page HOME