மெட்ராட் கபே படத்தை புகழ்ந்த நீது சந்திரா: கிளம்பியது சர்ச்சை

‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் நடிகை நீது சந்திரா.
நீது தமிழில் ‘யாவரும் நலம்’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
‘மெட்ராஸ் கபே’ படத்தை புகழ்ந்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே இப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில் மெட்ராஸ் கபே படத்தை பார்த்த நீது சந்திரா படம் பிரமாதமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துளாராம்.
இதனை கண்டித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் எஸ்.எஸ்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ராஸ் கபே தமிழர்களுக்கு எதிரான படம்.
இலங்கையில் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு ஆதரவான படமாக எடுத்துள்ளனர்.
இந்நிலையில் படத்தை புகழ்ந்து பேசி நீது சந்திரா தமிழர்கள் மனதை புண்படுத்தி உள்ளார்.
மேலும் தமிழ் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share |
Previous Page Next Page HOME