சமீபத்தில் வேலூரில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய கார்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பாட்ஷா’ படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க ஆசையாகவும், தயாராகவும் இருக்கிறேன் என்று கூறினார்.
அவர் கூறியதை போல இப்போது ரஜினியின் ரீமெக் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் கார்த்திக். ஆனால் அது ’பாட்ஷா’ இல்லை ரஜினியின் ’மூன்று முகம்’. 1982–ஆம் ஆண்டு ரஜினி மூன்று வேடங்களில் நடித்து ரீலிசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘மூன்று முகம்’.
ரஜினிக்கு இந்தப் படம் திருப்புமுனை படமாக அமைந்தது. அலெக்ஸ்பாண்டியன் என்ற போலீஸ் கேரக்டரில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்போது இந்தப் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.
இதில் ரஜினியின் மூன்று வேடங்களில் கார்த்தி நடிக்கிறார். கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். ஏற்கனவே இருவரும் ‘பையா’, ‘சிறுத்தை’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப்படம் தனக்கும் முக்கிய படமாக இருக்கும் என்று கார்த்தி கூறியுள்ளாராம். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

![]()